டயமன்ட் கப்பல் 40 கடல்மைல் தொலைவுக்கு அப்பால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது

கிழக்கு கடற்பரப்பில் தீவிபத்துக்குள்ளான MT New Diamond கப்பல் 40 கடல்மைல் தொலைவுக்கு அப்பால் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்காக இந்திய  கடற்படை  உறுப்பினர்கள்  மற்றும் பொறியியலாளர்கள் 22 பேர்  இந்திய விமானபடைக்கு  சொந்தமான விசேட விமானமூடாக நேற்று இரவு மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும் குறித்த நடவடிக்கைகளுக்காக   சுமார் 11 கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்கடை ஊடகப்பேச்சாளர் கெப்டன் இந்திக்க  டி சில்வா  தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை கப்பல் ஆழமற்ற கடற்பகுதிக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ள நிலையில் தீயணைப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments: