4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு


நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலைக் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றுவரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு,மண்சரிவு எற்படுவதற்கான முன் அறிகுறிகள் தென்படுமாயின் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு பொதுமக்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.

No comments: