கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு 2ம் திகதி வரை விளக்கமறியல்

  -கனகராசா சரவணன்-மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தில் கடந்த 17 ம் திகதி போத்தலால் ஒருவரை குத்திய மற்றும் நீதிமன்ற திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்படட நிலையில்  கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 2 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி,ஏ. றிஸ்வான் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

குறித்த நபர் கடந்த 2018 ம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற வழக்கு ஒன்றில் பிணையில் வெளிவந்து பின் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் நீதிமன்ற திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 17 ம் திகதி கூளாவடி பகுதியில் ஒருவரை போத்திலால் குத்தி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார் இதனையடுத்து பொலிசார் இவரை வலைவீசி தேடிவந்த நிலையில் குறித்த நபர் தொடர்பாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) மதுபானசாலை ஒன்றிற்கு அருகில் வைத்து பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்து சோதனையின் போது அவரின் பணப் பையில் கஞ்சா மீட்கபட்டது 

இதில் கைது செய்யப்பட்டவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் எனவும் இவரை இன்று திங்கட்கிழமை (21)  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி,ஏ. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவரை எதிர்லரும் 2ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

No comments: