சர்வதேச செவிப்புல வலுவிழந்தோர் வாரம் செப்டொம்பர் மாத கடைசி ஞாயிறு (செப்., 26) கடைப்பிடிக்கப்படுகிறது.நடராஜன் மிதுனாளினிசைகை மொழி பெயர்ப்பாளர்கள், செவிப்பபுல வலுவிழந்தோர் அவர்களின் நண்பர்கள் மற்றும் தேசிய அரசாங்கங்கள், தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்பு போன்றவை 2020 இல் சர்வதேச செவிப்பபுல வலுவிழந்தோர் வாரத்தின் கருப்பொருளாக "செவிப்புல வலுவிழந்த மக்களின் மனித உரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்தல்" என்றதாக காணப்படுகிறது.

சர்வதேச செவிப்பபுல வலுவிழந்தோர் வாரத்தில் நாம் அவர்களுடைய அடிப்படை உரிமையான மொழி தொடர்பாக ஓர் அடிப்படை அறிவையேனும் பெற்றுக்கொள்வது என்பது மிகவும் சிறப்பானதாக அமையும்.

அதனடிப்படையில் உலகில் வாழும் கதைக்கும் திறனுடைய மக்களான எமக்கு எவ்வாறு பல்வேறுபட்ட மொழி உள்ளதோ அதே போன்றே கதைக்கும் திறனற்ற செவிப்பபுல வலுவிழந்தவர்களிற்கு பல்வேறு மொழி உள்ளது. நாம் எங்கள் எங்கள் தாய் மொழியையும் இதர தேவைகளிற்காக மேலும் பல மொழிகளையும் கற்பது போன்று அவர்களும் தமக்கான தாய் மொழியையும் ஏனைய மொழிகளையும் கற்கின்றனர்.

கதைக்கும் திறனுள்ளவர்களுக்கும் கதைக்கும் திறனற்றவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஒன்றே ஒன்று மட்டுமே, நாம் வாயினால் உரையாடுகின்றோம், அவர்கள் கையினால் (சைகையினால்) உரையாடுகின்றனர்.இலங்கையில் வாழும் மக்களை எடுத்துக் கொண்டால் சிங்களம், தமிழ் ஏதோ ஒரு மொழியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் இரண்டாம் மொழியினையும் பொது மொழி ஆங்கிலத்தினையும் கற்கின்றோம். அதனை தேவைக்கேற்ப பயன்படுத்துகின்றேம்.

அது போலவே செவிப்பபுல வலுவிழந்தவர்களிற்கும் தமிழ் சைகை மொழி, சிங்கள சைகை மொழி என்ற இரண்டு சைகை மொழியுண்டு. தாய் மொழியாக தமிழ் மொழியைக் கொண்டவர்கள் தமிழ் சைகை மொழியினையும், தாய் மொழியாக சிங்கள மொழியைக் கொண்டவர்களா சிங்கள சைகை மொழியினையும் கற்கின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் இரண்டு சைகை மொழியினையும் அறிந்தவர்களாகவே உள்ளனர்.

தமிழ், சிங்கள சைகை மொழி கதைக்கும் எந்த செவிப்புல.வலுவிழந்தோர்களுக்கிடையிலும் ஓர் சைகை மொழி பெயர்பளர் தேவைப்படுவதில்லை என்பதே சிறப்பம்சம் ஆகும்.

இலங்கையில் யுத்தகாலங்களில் கூட செவிப்புல வலுவிழந்தோர்களுக்கான மொழிக்கான உரிமை போராட்டம் செய்ததில்லை. ஏனெனில் அவர்களின் மொழி உரிமை (தமிழ் சைகை மொழியாக இருந்தாலும் சரி சிங்கள சைகை மொழியாக இருந்தாலும் சரி) பறிக்கப்படவும் இல்லை, திணிக்கப்படவுமில்லை.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழ் செவிப்புல வலுவிழந்த மாணவர்கள் கடந்த சில வருடங்கள் தமது தாய் தமிழ் சைகை மொழிக்காக போராட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


இதனை புரிந்து விளங்கி அவர்களின் மொழிப்பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டிய பொறுப்பிலுள்ளவர்களே கண்டும் காணாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விசயமாகும். எனது கோணத்தில் இதற்கு இரண்டு காரணம் இருக்க முடியும்

* அவர்கள் செவிப்புல வலுவிழந்தவர்களின் நலனில் உரிமைகளில் அக்கறை கொள்ளாமை

* செவிப்புல வலுவிழந்தோரின் சைகை மொழியினை அறிந்திருக்காதுவிடின் அவர்களிற்கான எந்த உதவிகளையும் / தீர்வுகளையும் வழங்க முடியாது.

தமிழ் சைகை மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்கள சைகை மொழியானது ஒரு மொழிக்கொள்கை என்ற அடிப்படையில் உட்படுத்தப்பட்ட ஆரம்பம் முதல் பல அதிகாரிகளை தமிழ் சைகை மொழியினையே மீண்டும் கற்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சந்தித்த வேளை, அவர்களது வினாவாக / ஆலோசணையாக இருப்பது ஏன் இவர்கள் ஒரே மொழியை (பொது மொழியாக) பயன்படுத்த கூடாது? அப்படி பயன் படுத்தினால் பிரச்சனைகள் இருக்காதல்லவா என்பதாக காணப்பட்டது.கதைக்கும் திறன் கொண்டவர்களான எம்மால் பொது மொழியாக ஒரு மொழியை பயன்படுத்த முடியுமா? அல்லது இலங்கையில் இருக்கும் எம்மால் தான் ஒரு மொழியை பொது மொழியாக கொண்டு உரையாட கற்க முடியுமா என்ற அடிப்படை விசயத்தை கூட ஏன் நாம் சிந்திக்க தவறுகின்றோம்?? கதைக்கும் திறன் உள்ள எம்மிடம் நீங்கள் அனைவரும் பொது மொழியாக ஒரு மொழியை பயன்படுத்துங்கள் என செவிப்புல வலுவிழந்தோர் சமூகம் எம்மை நோக்கி கூறினால் எம்மால் அதனை ஏற்று கொள்ள முடியுமா?

பொது மொழியாக ஒன்றை பயன்படுத்துங்கள் என அவர்களின் உரிமையை மறுக்கும் உரிமை எம்கில்லையே...

கடந்த சில வருடங்களாக செவிப்புல வலுவிழந்த சமூகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையாக இருப்பது உச்சரிப்பில் (விரல்மொழியில்) தமிழிலும், வார்த்தையாக (சைகையாக) கூறும் போது சிங்களத்திலும் கற்பிப்பது என்பது நடைமுறைக்கு எப்படி சாத்தியமாகும்??

மிக எளிமையாக சொல்ல போனால் வணக்கம் என்ற சொல்லினை உச்சரிக்கும் போது வ(ன) ண(ன) க்(ன) க(ன) ம்(ன) என விரல் மொழியிலும் எழுத்து வடிவிலும் கற்றுக் கொடுத்த பின்னர் வார்த்தையாக வணக்கம் என சொல்வதற்கு பதிலாக ஆயுபோவன் என கற்றுக் கொடுக்கின்றமை மிகுந்த வேதனைக்குரிய விடயமாக காணப்படுவதை நாம் புரிந்து கொள்ளாதிருப்பது அவர்களின் மொழியுரிமையை பறிக்கும் செயலிற்கு ஒப்பானதாகும்.

தாய் தமிழ் சைகை மொழியில் கல்விகற்ற செவிப்புல வலுவிழந்த மாணவர்கள் புலம்பெயர் தேசம் வாழ் செவிப்புல வலுவிழந்தோர் பிரதிநிதிகள் மற்றும் பிறநாட்டு செவிப்புல வலுவிழந்தோர் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் ஒன்றினைந்து 2017ம் ஆண்டு யாழ் மாவட்ட செயலகத்தில் ஓர் ஒன்றுகூடலிற்கு ஏற்பாடு செய்திருந்த போதும் அழைக்கப்பட்ட பொறுப்புக்கூறும் நிலையிலுள்வர்கள் சமூகம் அளிக்காமையே அவர்களிற்கான மொழி உரிமை மறுக்கப்பட்டதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. அத்தனை செவிப்புல வலுவிழந்த மாணவர்களும் ஏமாற்றத்துடனேயே தத்தம் நாடு திரும்பினர்.

அரச, தனியார் துறைகளிற்கு ஏதாவது தேவைக்கு சென்றால் தொடர்பாடல் என்பது கடினமாகவே உள்ளது. காரணம் தமிழ் சைகை மொழியை கற்றவர் ஒருவர் ஏனும் அங்கு பணியில் இல்லாமையாகும். இதனால் தமக்குரிய தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய முடியாத துர்பாக்கிய நிலையில் உள்ளார்கள்.

தற்போதய சூழ்நிலையில் தமிழ் சைகை மொழி பெயர்பாளர்களின் தேவை அதிகமாக உள்ளமையினால் யாழ் வடமராட்சி செவிப்புல வலுவிழந்தோர் நிறுவனத்தினரின் வேண்டுகோளிற்கமையை அவர்களோடு தமிழ் சைகை மொழி சார் உரிமைக்காக இணைந்து செயற்பட்ட விது நம்பிக்கை நிதியத்தினரும் மற்றும் யாழ் பாதுகாப்பு படைப்பிரிவு தலைமை அலுவலகமும் இணைந்து தமிழ் சைகை மொழி பயிற்சி நெறியினை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. தமிழ் சைகை மொழி பெயர்பாளர்களை அதிகரிக்கும் நோக்குடன் விது நம்பிக்கை நிதியத்தினரின் முழுமையான நிதி அனுசரனையில் ஆரம்பிக்கப்பட்ட இவ் பயிற்சி நெறியானது இலவச பயிற்சி நெறியாகவே கற்பிக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடதக்கது.

இவ் பயிற்சி நெறியில் அரச தனியார் உத்தியோகத்தர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் அனுமதிக்கப்பட்டமையால், எதிர்காலத்தில் செவிப்புல வலுவிழந்தோர் சார் தொடர்பாடல் இடர்கள் குறைக்கப்படும் என நம்புகிறோம். தமிழ் சைகை மொழிக்கான அனைத்து செயல்பாடுகளையும் முன்னெடுத்து செல்ல விது நம்பிக்கை நிதியத்துடன் தமிழ் செவிப்புல வலுவிழந்தோர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

தமிழ் சைகை மொழியினை நாம் கற்று அதனை மற்றவர்களிற்கும் கற்பித்து சமூகத்தில் அவர்களும் இயல்பாக உரையாடவும் வாழவும் நாமும் கை கொடுப்போமாக.

உலக செவிப்புல வலுவிழந்தோர் அமைப்பின் 2020ம் ஆண்டிற்கான கருப்பொருளான "செவிப்புலவலுவிழந்தோர் உரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்தல்" என்பதை நாமும் உறுதிசெய்வோமாக ...

செவிப்புல வலுவிழந்தோரால் கேட்கவும் கதைக்கவும் இயலாது போயினும் அவர்கள் தம்மை தாமே முடக்காது, தம் சைகைமொழி மூலமாக தமக்கான தொடர்பாடல்களை மேற்கொள்கின்றார்கள்.

இவ் உலகெங்கும் பரந்து வாழும் மாற்றுத்திறனாளிகளின் (செவிப்புல வலுவிழந்தோர், விழிப்புல.வலுவிழந்தோர், அங்கக் குறைபாடு/அவயம் இழந்தோர், ஒட்டிசம், திறன்வளர்ச்சி குன்றியோர், மனவளர்ச்சி குன்றியோர்) சர்வதேச தினமாக டிசம்பர் 03 உலகலாவியரீதியில் கொண்டாடப்படுவது நாம் அறிந்தது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் ஒரு பிரிவினரான செவிப்பபுல வலுவிழந்தோர் அமைப்பின் (World Federation Of The Deaf)(WFD) ஓர் முயற்சியியே 1958ல், காது கேளாதோர் தினம் தொடங்கப்பட்டது. பின் இது காது கேளாதோர் வாரமாக மாற்றப்பட்டது. செப்டொம்பர் மாத கடைசி ஞாயிறு (செப்., 26) இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ் உலக செவிப்பபுல வலுவிழந்தோர் வாரம் ஆகும். இது 1958ம் ஆண்டு இத்தாலியில் உரோம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது (WFD). முதன்முதலாக கூட்டம் /ஒன்றுகூடல் நடைபெற்ற புரட்டாதி மாத இறுதி வாரத்தினை நினைவு கூறும் முகமாகவே புரட்டாதி மாத இறுதி வாரத்தினை உலக சைகை மொழி வாரமாக கொண்டாட தீர்மானித்தனர்.No comments: