20வது திருத்தமானது நாட்டின் எதிர்காலத்திற்கும்,ஜனநாயகத்திற்கும் பாதகமானதாக உள்ளது-ருவான் விஜேவர்தன தெரிவிப்பு


ஐக்கிய தேசியக்கட்சி என்ற ரீதியில் நாம் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க போவதில்லை. நாட்டின் அரசியலமைப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு யோசனையாகவே இந்த திருத்தம் காணப்படுகின்றது.

20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க போவதில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இன்று பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாது செய்யப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு இருந்த அதிகாரங்கள் மீண்டும் ஜனாதிபதிக்கு பெற்றுக்கொடுக்கும் ஒரு அமைப்பாகவே இது உள்ளது.

இந்த திருத்தமானது நாட்டின் எதிர்காலத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பாதகமானதாக உள்ளது.

ஆகவே 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக செயற்படத் தீர்மானித்துள்ளோம் என ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: