20வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு


20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க் கட்சியினர் தமது பலத்தை எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

குறித்த சட்டமூலம் அமளி துமளிகளுக்கு மத்தியில் நீதியமைச்சர் அலி சப்ரியினால் சபையில் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர், தமது கைககளில் கறுப்புப் பட்டிகளை அணிந்தும், பதாகைகளை ஏந்தியவாறும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

அத்துடன், குறித்த சட்டமூலம், ஜனநாயக விரோத செயற்பாடாகும் எனவும், அது நாட்டுக்கு அழிவை ஏற்படுத்துவதாகவும் எதிர்க் கட்சியினர் கோஷங்களை எழுப்பியுள்ளனர்

இந்த நிலையில், எதிப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

எனினும், இவ்வாறு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வெளியிடுகின்றமை நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு, விரோதமானவை என அமைச்சர் பந்துல சுட்டிக்காட்டினார்.

அத்துடன், 20வது திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் எனில், எதிர்க் கட்சியினர் நீதிமன்றத்தை நாட வேண்டும் எனவும், அல்லது அதனை தோற்கடிப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இந்த நிலையில், 20வது திருத்தத்தை கொண்டு வருவதற்காகவே, ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மக்கள் செல்வாக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: