20வது திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு 20வது திருத்தத்தின் சட்டமூல வரைவை வர்த்தமானியில் வெளியிடவும் இன்றைய அமைச்சரவை சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், தகவலறியும் உரிமை, ஜனாதிபதியின் போட்டியிடக்கூடிய தடவைகள், ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் ஆகிய விடயங்கள் தவிர்ந்த அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் காணப்படும் ஏனைய அனைத்து விடயங்களையும் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: