20வது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை எதிர்வரும் வெள்ளிக்கிழமை


20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான இரண்டாவது நாள்  பரிசீலனையும் நிறைவு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த மனுக்கள் மீதான மேலதிக  பரிசீலனையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மேற்கொள்ள நீதிபதிகள் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20வது அரசியலமைப்பு திருத்த வரைபு எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த 22 ஆம் திகதி நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: