20வது திருத்தம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் விடுத்துள்ள கோரிக்கை


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் அவசரம் காண்பிப்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லை என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

20 ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக்குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நாடொன்று சமத்துவம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை நோக்கிப் பயணிப்பதை  உறுதிசெய்வதற்கு ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மிகவும் அவசியமானவையாகும் எனவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய  பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: