20வது திருத்தம் தொடர்பிலான குழுவின் அறிக்கைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அனுமதி


அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அங்கீகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சில திருத்தங்களின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்க கேட்போர் கூடத்தில், இன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் கூட்டத்தில் இந்த அறிக்கை குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, சில திருத்தங்களின் கீழ் குழுவின் அறிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: