20வது திருத்தத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்-ஐக்கிய மக்கள் சக்தி


20வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான அனைத்து சக்திகளும் இணைந்து  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக  ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஒக்டோபர் ஐந்தாம் திகதி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் என்றும் கறுப்புகொடி ஏற்றப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் ஐந்தாம் திகதி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் என்றும் கறுப்புகொடி ஏற்றப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் 20வது திருத்தம் குறித்து மக்களுக்கு துண்டுபிரசுரத்தை விநியோகிக்கும் நடவடிக்கையும் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளாவிய ரீதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளும் தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்புகளும் கலந்துகொள்ளவுள்ளன எனவும்  நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன மேலும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: