20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றில் மனுத்தாக்கல்


பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் சற்று முன்னர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த மனு, உயர் நீதிமன்றத்தில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு,மூன்று வார காலத்துக்குள் குறித்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 20வது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து நேற்றைய தினமும், சட்டதரணி ஒருவரினால் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

No comments: