20வது சட்டமூலம் தொடர்பில் வெளியான தகவல்


20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், முதலாம் வாசிப்பிற்காக  எதிர்வரும் 22ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் முதலாம் வாசிப்பிற்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படடதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்லவேண்டுமாயின் அதற்காக ஏழு நாட்கள் வழங்கப்படும்,அவ்வாறு மனுத்தாக்கல் செய்யப்பட்டால் நீதிமன்ற செயற்பாடுகளுக்காக 3 வாரக்காலப்பகுதி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னரே இரண்டாம் வாசிப்பிற்காக அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் பாராளுமன்ற பிரதி செயலாளர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: