பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ள அரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை


அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்டமூல வரைவு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள 9 பேர் அடங்கிய குழுவின் அறிக்கை இன்றைய தினம் பிரமரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதமரால் நியமிக்கப்பட்ட  குறித்த குழு நேற்றைய தினம் கூடிய நிலையில் உத்தேச 20வது திருத்தச்சட்ட வரைவு உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பல்வேறு கருத்துக்களை குறித்தும் ஆராய்ந்திருந்நததாகவும்,இந்நிலையில் அந்த அறிக்கையினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அது அமைச்சவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: