எந்தவித மாற்றமுமின்றி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள 20வது அரசியலமைப்பு திருத்தம்


20வது அரசியலமைப்பு திருத்த வரைவை எந்தவித மாற்றமுமின்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரசியலமைப்பு 20வது திருத்தம் வரைவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதுடன் சபையில் சமர்ப்பிக்கப்படும்  அரசியலமைப்பு வரைவில் எந்தவொரு திருத்தத்தையும் பாராளுமன்றம் மேற்கொள்ளவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்காக பணியாற்றுவதற்கான மக்களால் தனக்கு ஆணை வழங்கப்பட்டதாகவும்,19வது திருத்தத்தை எவ்வாறெனினும் நீக்குவேன் என்றும் ஜனாதிபதி இதன் போது கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நோக்கத்திற்காக 20வது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் வரைவில் எந்தவொரு திருத்தத்தையும் பாராளுமன்றத்தினால் மேற்கொள்ள முடியும் எனவும்,ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலங்களும்,19வது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள ஜனாதிபதியின் இரண்டு கால வரம்பும் மாற்றப்படாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக தெரியவந்துள்ளது.

No comments: