மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக 20 குடும்பங்கள் வெளியேற்றம்


களுத்துறை பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக 20 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

20 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றதோடு,இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்கள் பதுரலிய பகுதியில் அமைந்துள்ள விஹாரையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்களுக்கு தேவையான நிவாரண ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments: