கிழக்குப் பல்கலைக்கழக தொழிலுலகைநோக்கி’கண்காட்சியும் விற்பனையும் - 2020

(கனகராசா சரவணன் )

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரால் கலையாக்கங்களினூடாக தொழிலுலகை நோக்கிஎனும் கருப்பொருiளை மையப்படுத்தி கைவினைசார் தொழிற்கலைகளை அடிப்படையாகக் கொண்டுகலையும் தொழில் முனைவும் எனும் பாடப்பரப்பை மையப்படுத்திய ஆக்கப் பொருட்களின் கண்காட்சி பல்கலைக்கழக மூதவைக் கட்டடமுன்றலில் இடம்பெற்றது.

நுண்கலைத்துறைத் தலைவர் திரு.சு.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கலைகலாசார பீடாதிபதி கலாநிதி ஜெ. கென்னடி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கண்காட்சிக் கூடத்தைத் திறந்துவைத்தார்.
கலை கலாசார பீடத்தின் மொழித்துறைத் தலைவர் கலாநிதி சி.சந்திரசேகரம், புவியியல் துறைதலைவர். சி. கிருபைராஜா ஆகியோருடன் சிரேஸ்ட விரிவுரையாளர்களான கலாநிதி சி.nஐயசங்கர், கலாநிதி. ரூபிவலன்ரினா பிரான்சிஸ், கலாநிதி. நதீரா, கலாநிதி. வ. இன்பமோகன் ஆகியோர் கலந்;து கொண்டு சிறப்பித்தனர்

மாறிக் கொண்டுவரும் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களுக்கமைய உள்@ர் பண்பாட்டுப் பொருளாதாரத்தில் கைத்தொழில் சார்ந்த தொழில் முனைவுக் கலைகளின் அவசியம் இன்று பலவகைகளிலும் உணரப்படுகின்றமையையும் அதனை நுண்கலைத்துறை தனது பாடவிதானத்தினூடாகவும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுக@டாகவும் தொடர்ச்சியாக இவ்வாறு முன்னெடுத்து வருகின்றது எனவும் நுண்கலைத்துறைத் தலைவர் திரு.சு.சந்திரகுமார் தனது தலைமையுரையில் வலியுறுத்தினாh.;

பிரதமஅதிதி உரையாற்றுகையில் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டு ரீதியான கற்றல் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் அளித்து தொழிலுலகிற்குள் அவர்களைப் பிரவேசிக்கச் செய்யும் முயற்சியில் நுண்கலைத் துறையினர் வருடாவருடம் ஆற்றிவரும் பங்களிப்பு அளப்பெரியது எனவும் காலமாற்றத்திற்குத் தேவையான செயற்பாடுகளை நுண்கலைத் துறையினர் ஆற்றி வருவது பாராட்டிற்குரியது எனக்கூறியிருந்தார்.

உள்@ர் மூலப்பொருட்களான சிரட்டை, தும்பு, களி, பனையோலை, மரம் சிப்பி, முத்துக்கள், துணி, சாக்கு போன்றவற்றை மூலப் பொருளாகக் கொண்டு மாணவர்களால் உருவாக்கப்பட்ட 800 இற்குமேற்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

பல்கலைக்கழகத்தின் கல்விசார் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் எனபலரும் கண்காட்சியிலும் விற்பனையிலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: