புதிய வீதி ஒழுங்கை மீறுபவர்களுக்கு நாளை முதல் 2000 ரூபாய் அபராதம்


புதிய வீதி ஒழுங்கின்படி இன்று முதல் பேருந்து முன்னுரிமை பாதையில் பயணிக்குமாறு முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு பொலிசார் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வீதி ஒழுங்கை மீறுபவர்களுக்கு நாளை முதல் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வீதி ஒழுங்குச் சட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் பதாதைகளை வீதிகளில் காட்சிப்படுத்திய பெண் பொலிஸார் அக்கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பதாதைகளைக் காட்சிப்படுத்துவதற்கு, பெண் பொலிஸாரை பயன்படுத்தியமைத் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் இந்த கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனால், போக்குவரத்து பிரிவின் அதிகாரிகளுக்கு இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: