20வது திருத்தத்திற்கு எதிராக மேலும் 6 மனுதாக்கல்


அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்று மேலும் 6 மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை 18 மனுக்கள் 20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 29ம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


No comments: