20வது திருத்தத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய 53 திருத்தங்கள் அடங்கிய ஆவணம் உயர்நீதிமன்றில் சமர்ப்பிப்பு


தெரிவுக்குழு கட்டத்தின் போது அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20வது திருத்தத்தில்  மேற்கொள்ளப்பட வேண்டிய 53 திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

நாடாளுமன்றத்தை ஒரு வருடத்தில் கலைக்கும் அதிகாரம் ஜனாபதிக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,இரண்டரை ஆண்டுகளின் பின்னரே நாடாளுமனறத்தை கலைக்க முடியும் என திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட திருத்தங்களில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும்  செயற்பாடுகளின் கீழ் கோரப்பட்டபடி,இலவச மற்றும் நியாயமான தேர்தலுக்கு ஏற்ப சூழலை உருவாக்குவதை உறுதி செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்ற பிரிவும் உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments: