20வது சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேலும் 2 மனுதாக்கல்


அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு எதிராக மேலும் இரண்டு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் இதுவரை 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதான பரிசீலனை செப்டெம்பர் 29 ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதற்காக பிரதம நீதியரசரினால் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது..No comments: