இன்றுமுதல் முட்டையின் விலை 2 ரூபாவினால் குறைப்பு

முட்டை ஒன்றின் விலை  இன்று முதல்  2 ரூபாவினால் குறைப்பதற்கு நாட்டின் அனைத்து முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அனைத்து முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியோருக்கு இடையில் அலரிமாளிகையில் நேற்று முன்தினம் தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின்  பின்னர்  நாட்டின்  அனைத்து முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, வெள்ளை முட்டை ஒன்றின் சில்லறை விலை 21 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் விலை 22 ரூபாவாகவும் காணப்பட்டதாக  நாட்டின் அனைத்து முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், புதிய தீர்மானத்தின் அடிப்படையில், வெள்ளை முட்டை ஒன்றின் மொத்த விலை 19 ரூபா 50 சதமாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 20 ரூபாவாகவும் குறைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: