இன்று 2வது நாளாகவும் இடம்பெறவுள்ள 20வது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள்


அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று 2வது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

20வது திருத்தத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்பான விசாரணைகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டன.

மேலும் பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது 20ம் திருத்த சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 53 திருத்தங்கள் அடங்கிய ஆவணம் சட்டமா அதிபரினால் நேற்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமைக் கறிப்பிடத்தக்கது.

No comments: