19வது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதற்கான காரணம்-நீதி அமைச்சர் தெரிவிப்பு



ஜனாதிபதி நாட்டுக்கான சேவையை முன்னெடுப்பதற்காகவே 19வது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

களுத்துறைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்துரைத்தப் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அனைவரும் அச்சம்,சந்தேகம் இன்றி வாழ்வதற்கான நாட்டை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களையே நாம் முன்னெடுத்து வருகின்றோம்.தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.

ஜனாதிபதிக்கு சேவையாற்றக்கூடிய சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்காகவே 19வது சீர்திருத்தம் நீக்கப்படவுள்ளது.19ம் திருத்தச்சட்டத்தில் காவற்துறை ஆணைக்குழு ஒன்றைஉருவாக்கி அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.இதன் ஊடாக குற்றச்செயல்களை குறைக்கும் நோக்கிலே குறித்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.ஆ னால் இதன் மூலம் குற்றங்கள் குறைந்ததா அல்லது கூடியதா என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.ஆணைக்குழுக்கள் முக்கியமல்ல மக்களுக்காக பாதுகாப்பை வழங்குவதே அவசியம் என நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: