அமெரிக்காவில் வீசா காலம் நிறைவடைந்த நிலையில் நாடு திரும்பிய 18 இலங்கையர்கள்
அமெரிக்காவில் வீசா காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியிருந்த 18 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த 18 பேரும் அமெரிக்காவில் இருந்து நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாகவும்,அமெரிக்காவில் வீசா காலம் நிறைவடைந்த நிலையில் அந்த நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாடு திரும்பியவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களில் பணியாற்றும் சீன பிரஜைகள் 53 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த அனைவரும் விமான நிலையத்தில் பி.சி. ஆர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 206 சீன பிரஜைகள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த ஈஸ்டர்ன் விமான சேவைக்கு சொந்தமான போயிங் 777 எனும் விமானமூடாக குறித்த அனைவரும் சீனாவின் ஷங்காய் நகருக்க அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: