164 ஓட்டங்கைளை ஹைதராபாத் அணிக்கு நிர்ணயித்தது பெங்களுர்IPL 2020

ஜபீஎல் போட்டித் தொடர்களில் இன்றைய தொடரானது சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கும் ரோயர் சலைஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கும் இடம் பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களுர அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தேவ் மிகச் சிறப்பான முறையில் அரைச்சதத்தினை நிறைவு செய்தார் இவரின் அரைச்சதமானது முதல் 10 ஓவர்கள் நிறைவில் அணிக்கும் பலம் சேர்த்தது.

இதன் பின்னர் போல்ட் முறையில் ஆட்டமிளந்த தேவிற்கு பன்னர் அணியின் தலைவர் விராட்கோலி களமிறங்கியிருந்தாலும் அணியின் ஓட்ட எண்ணிக்கை மந்த கதியில் அமைந்தது 15 ஓவர்கள் நிறையில் 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது பெங்களுர்.

15.5 ஓவர்கள் நிறைவில் நடராஜனின் பந்து வீச்சில் பிடிகொடுத்து 13 பந்துவீச்சுக்களை சந்தித்து 14 ஓட்டங்களுடன் ஆட்டமிளர்தார் கோலி.

இதன் பின்னர் ஏ.பீ.டீ வில்லியர்ஸ் அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் சிக்சர் மழை பொழிந்ததுடன் 19.3 ஓவர்கள் நிறைவில் 30 பத்து வீச்சுக்களை சந்தித்து 51 ஓட்டங்களை பெற்று அரைச்சதத்தினை பூர்த்தி செய்ததுடன் குமாரின் பந்து வீச்சில் ரண் அவுட் முறையில் ஆட்டமிளந்தார்.

தேவ் மற்றும் வில்லியர்சின் அரைச்சதங்கள் அணிக்கு மேலும் பலம் சேர்த்து 20 ஓவர்கள் நிறைவில் 163-5 என்ற கணக்கில் அரைச் சுற்று நிறைவு பெற்றது.

பெங்களுர் அணி ஹைதராபாத் அணிக்கு 164 என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது

No comments: