சட்ட ரீதியாக 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொழிலுக்கு செல்ல முடியும்


சட்ட ரீதியாக 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியும் என இன்று அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக தொழில் செய்வதற்கான ஆகக்குறைந்த வயது 18 ஆக இருந்தது.

“பாடசாலைக் காலம் 16 ஆண்டுகளாக இருக்கும் சட்டவிதிகளுக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு பொருந்தக்கூடிய சட்ட விதிகளின் அடிப்படையில் சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்த பட்ச வயது 16 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,கடந்த 2020 ஜூன் 10 அன்று அமைச்சரவை இந்தத் திருத்தத்துக்கான ஒப்புதலை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: