காற்றுடன் கூடிய மழை காரணமாக 14 வீடுகள் பாதிப்பு-74 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வு

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் 



நாட்டில் தொடரும் அடைமழை மற்றும் பலத்த காற்று வீசியதன் காரணமாக கினிகத்தேனை கெனில்வத்த தோட்டப்பகுதியில் 14 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதோடு ஒரு குடியிருப்பு மீது பலாமரம் ஒன்று சாய்ந்ததில் 14 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 14 குடியிருப்புகளில் வசித்து வந்த 74 பேர் இடம் பெயர்ந்து பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் 21.09.2020 திங்கட்கிழமை மாலை 05.30மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தோட்ட நிர்வாகத்தினால் சமைத்த உணவுகள்  வழங்கப்பட்டு வருவதோடு  குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பபான கிராம உத்தியோகத்தர் ஊடாக அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளை சீர் செய்வதற்காக இராணுவ தளபதிகள் லிப்டினல் ஜெனரல் சவேந்ரசில்வாவின் பணிப்புரைக்கமைய லக்ஸபான இரானுவ முகாமின் உத்தியோகத்தர் நிலந்த குனவர்தன தலைமையில் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை சீர் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





No comments: