ஜனாதிபதி முன்னிலையில் 12 நீதிபதிகள் நியமனம்


12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

நியமனக் கடிதங்கள் அந்தந்த நீதிபதிகளிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது..

அதன்படி, ஒரு தலைமை நீதவான், இரண்டு நீதவான், ஆறு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதி மற்றும் இரண்டு மூத்த அரச ஆலோசகர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: