கொழும்பின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர் விநியோகத்தடை

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம்  12 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 12ஆம் திகதி  இரவு 10 மணி முதல்  13 ஆம் திகதி  காலை 10 மணி வரையிலே இந்த 12 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் இதன்படி, கொழும்பு 10, 11, 12, 13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளிலே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

No comments: