சட்டவிரோதமான முறையில் மஞ்சள் இறக்குமதி- 10 பேர் கைது


சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 33 ஆயிரம் கிலோகிராம் உலர் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுங்கத்திணைக்களம் மற்றும் கொழும்பு 13 பொலிஸாரினால் குறித்த  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

7  லொறிகள் மற்றும்  மூன்று கனரக வாகனங்களில் கடத்திச்  செல்வதற்கு முயற்சித்த சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: