பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் வேதனம் வழங்குவது தொடர்பில் தொழில் அமைச்சரின் ஆலோசனை


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் வேதனம் வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களது நிலைப்பாடுகளை இரண்டு வாரங்களில் அறிவிக்க வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்கள்,கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் ஆகியவற்றிற்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றது.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களது தீர்மானங்களை அறிவிக்காதவிடத்து அரசாங்கம் தமது முடிவை அறிவிக்கும் என தொழிலமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டதாக இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: