நியூ டயமன்ட் கப்பல் தீ விபத்து தொடர்பில் ஆராய 10 பேர் கொண்ட வெளிநாட்டு நிபுணர்கள் குழு

நியூ டயமன்ட் கப்பல் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக 10 பேர் அடங்கிய நிபுணர் குழு இன்று இலங்கை வந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான கப்பல் நிறுவனத்தின் தலையீட்டுக்கமைய,பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்பு நடவடிக்கை நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று இன்று அதிகாலை 6.45 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபுணர் குழுவினர் கல்முனையிலிருந்து கடற்படையினரால் விசேட படகின் ஊடாக விபத்துக்குள்ளான கப்பல் நிறுத்தப்பட்டுள்ள கடற்பிரதேசத்துக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: