குளவி கொட்டுக்கு இலக்காகிய 08 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய எட்டு தொழிலாளர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள்  மீது குளவிகள் கொட்டியுள்ளது.

மரத்திலிருந்து குளவி கூட்டை கழுகு கொட்டிய நிலையில் குளவிகள் கலைந்து தொழிலாளர்கள் மீது கொட்டியுள்ளது. 


No comments: