COVID-19 சர்வதேச தொற்றுக்கான தடுப்புமுறை பயிற்சி முகாமின் சான்றிதழ் வழங்கும் விழா
இந்நிகழ்வில் விருந்தோம்பல் துறையினை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், இடர் முகாமைத்துவ பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்கள் போன்றோருக்கு எவ்வாறு தொடர்புகள், வெளிப்பாடுகளை தவிர்ப்பது மற்றும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நடைமுறை(practical) வழிமுறையிலான ஐந்து(5) நாட்கள் பயிற்சியளிக்கப்பட்டதுடன் விருத்தினர்களிடம், ஊழியர்களிடம், வழங்குநர்களிடம் மற்றும் ஏனையவர்களிடம் எவ்வாறு தேவையற்ற தொடர்புகளை தவிர்த்து, சமூக இடைவெளியினை பேணுதல் தொடர்பான வழிகாட்டலும் வழங்கப்பட்டது.
மேலும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் (SLTDA), சுகாதார அமைச்சு (MOHSL), சுகாதார கொள்கைகள் தொடர்பான நிறுவகம் (IHP), உலக சுகாதார அமைப்பு(WHO) ஆகியவற்றினால் பரிந்துரைக்கப்பட்ட தனிநபர் பாதுகாப்பு உபகாரணகள்(PPE), தூய்மைப்படுத்தல் தொடர்பான சுகாதார நடைமுறைகளை அமுல் படுத்துவதன் ஊடாகவும் இவ் அமைப்புக்களுடன் ஒரு முறைமையாக இணைந்து செயற்படுவதன் மூலமும் ஆபத்துகளை குறைபத்தற்கும் மற்றும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல் தொடர்பாக ஆலோசனை பயிற்சியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதிகளாக உதவி மாவட்ட செயலாளர் திருமதி.எஸ்.ஸ்ரீகாந்த், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் சுற்றுலா திட்டமிடல் அபிவிருத்தி மற்றும் முதலீட்டுடாளர் உறவு பிரிவிற்கான பணிப்பாளர் டாக்டர்
No comments: