பொகவந்தலாவ சீனாகலை தோட்ட இளைஞன் ஒருவன் புகையிரதத்தில் மோதி பலி

 பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்


கொழும்பு மருதான பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதுண்டு பொகவந்தலாவ சீனாகலை

தோட்ட இளைஞன் ஒருவன் உயிர்ழந்துள்ளதாக  மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் 27.08.2020 வியாழக்கிழமை மாலை வேளையில் இடம்பெற்றதாக பொலிஸார்
தெரிவித்தனர. புகையிரதத்தில் மோதுண்டு உயரிழந்த இளைஞன் பொகவந்தலாவ
சீனாகலை தோட்டத்தை சேர்ந்த 24 வயதுடைய செல்வராஜ் கஜேந்திரன் என்ற இளைஞனே
இவ்வாறு உயிர்ழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து
தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் கொழும்பு பகுதியில் உள்ள புத்தநிலையம் ஒன்றில்
பணிபுரிந்து வந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபடவுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: