தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


ஹொரன பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கும் சாமிமலை மானெலு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இன்றைய தினம் ஹொரன பெருந்தோட்ட யாக்கத்தின் உதவி நிறைவேற்று அதிகாரி  அவர்களுக்கும் இ.தொ.கா.வின் பொதுச் செயலாளரும்  தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும்  இடையிலான கலந்துரையாடல் இ.தொ.கா வின் தலைமை காரியாலயத்தின்  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடலில் தொழிலாளர்கள் முன்வைத்த பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடி  உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
இதன் போது இ.தொ.கா.வின் பிரதி தலைவர் அனுஷா சிவராஜா, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் முன்னால் தலைவர் பரத் அருள்சாமி மற்றும்  குறித்த தோட்டத்தைச் சேர்ந்த தலைவர் அங்கத்தவர்கள் உட்பட  பலர் கலந்துக்கொண்டனர்.

No comments: