ஆறுகளில் சிறு கழிவுகளை கொட்டப்படாத வண்ணம் உரிய திட்டங்களை வகுக்குமாறு பிரதமர் வலியுறுத்தல்

நாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் வர்த்தக மற்றும் தங்குமிட வசதிகள் உள்ளடங்கும் வகையில் அபிவிருத்தித் திட்டங்களை தயாரிக்குமாறு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் முன்னேற்றங்கள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நகர் புறங்களில் மக்களுக்கு பதிவு செய்து கொள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தங்குமிட இடங்களில், அழுத்தங்களின் காரணமாக  வியாபார நிலையங்களை பதிவு செய்து கொள்வதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

கடலில் கழிவுகள் சேருவைதை தடுக்கும் நடவடிக்கையாக, ஆறுகளில் சிறு கழிவுகள் கொட்டப்படாத வண்ணம் உரிய திட்டங்களை வகுக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது..

No comments: