வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சப்ரகமுவ,மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழையுடன் கூடிய வானிலைக் காணக்கூடும் எனவும் பொலநறுவை மன்னார், திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டு சில பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி காற்று வீசக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: