பேருந்துகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கை எதிர்காலத்தில் நிறுத்தப்படும்


இலங்கைப் போக்குவரத்து சபைக்கு தேவையான பேருந்துகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கை எதிர்காலத்தில் நிறுத்தப்படும் என போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏக்கல பகுதியில் அமைந்துள்ள லக்திவ பொறியியல் நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதன் பின்னர,ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்காலத்தில் பேருந்துகளை இறக்குமதி செய்யாது,செஸி மற்றும் என்ஜின் போன்றவற்றை மாத்திரம் இறக்குமதி செய்து,இலங்கை போக்குவரத்து சபைக்குத் தேவையான பேருந்துகளை நாட்டிலேயே தயாரிக்க உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் போக்குவரத்து அமைச்சின் கீழ் செயற்படும் அரச நிறுவனமான லக்திவ பொறியியல் நிறுவனத்தின் ஊடாக தற்போது பழைய பேருந்துகளை புதிதாக உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: