நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்


நாட்டில் நேற்றைய தினம் 3 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக தெரியவந்துள்ளது.

பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம்,குவைட்  முதலான நாடுகளில் இருந்து நாடு திரும்பிய மூருக்கே கொரோனா தொற்றுறுதிச் செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2989 ஆக அதகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் 12 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து  வெளியேறியுள்ளதோடு, பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான 135 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: