அறநெறி பாடசாலை கல்வியை கட்டாயப்படுத்த வேண்டும்-பிரதமர் தெரிவிப்பு

நாட்டில் இடம்பெறும் பெரும்பாலான சீரழிவுகனைத் தடுப்பதற்கு அறநெறி பாடசாலை கல்வியை கட்டாயப்படுத்த வேண்டியது அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க கசாகல விகாரையில் இடம்பெற்ற 125வது அறநெறிப் பாடசாலை தினத்தின் தேசிய விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிள்ளைகளை அறநெறி பாடசாலைகளில் இணைப்பதன் ஊடாக நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை நாட்டிற்கு வழங்க முடியும்.இதை பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அறநெறி பாடசாலை முறையை மேலும் மேம்படுத்தும் வகையில் அறநெறி பாடசாலை கல்வி,கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் அதற்கு அமைச்சரொருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.அறநெறி பாடசாலையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஒரு படிமுறையாகும்.

இன்று நம் நாட்டில் இடம்பெறும் பெரும்பாலான சீரழிவுகள் அறநெறி பாடசாலை கல்வியை கற்காதவர்களினாலேயே ஏற்படுகின்றன.எனவே அறநெறி கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்.

மேலும் தெரிவித்ததாவது பௌத்த கல்வி மாத்திரமன்றி ஏனைய மதங்களைச் சார்ந்த பிள்ளைகளும் தங்களது சமயத்தைக் கற்பதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கருத்துரை வழங்கியதாக தெரியவந்துள்ளது.

No comments: