நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் இன்றையதினம் நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 23 இலங்கையர்களும்,கட்டார் டோஹாவில் இருந்து 296 இலங்கையர்களும்,ஜேர்மனியில் இருந்து 102 இலங்கையர்களும் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஊடாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகத் தந்த அனைவருக்கும் விமான நிலையங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: