நாட்டின் இன்றைய வானிலைநாட்டில் சப்ரகமுவ மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அதிகமான ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வரை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் பணயம் செய்வோரும் மீனவ சமூகமும், கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: