கொட்டகலை தேயிலைத் தொழிற்சாலைக்கு சான்றிதழ்

கொரோனா தொற்றை தடுப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி தேயிலை உற்பத்தி செய்யும் உலகின் முதல் தேயிலை தொழிற்சாலை என்ற பணியக தர நிர்ணய சான்றிதழை இலங்கை தொழிற்சாலையொன்று  பெற்றுகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன்-கொட்டகலை மவுண்ட்வேர்ணன் தேயிலை தொழிற்சாலையே குறித்த சான்றிதழைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கைத் தர நிர்ணய பணியகம் பரிந்துரைத்த பொருத்தமான சுகாதார ஆலோசனைகளுடன் தேயிலை கொழுந்து பறிப்பது தொடக்கம் தேயிலைத்துாள் உற்பத்தி செய்யப்படும் வரை செயல்படுத்தப்படுகிறதா என்பதை இரண்டு மாதங்களுக்கும் மேலாக கண்காணித்த பின்னரே இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: