கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும்  நாளை முதல் எதிர்வரும் 7ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் தரம் 11,12,13 ஆகியவற்றுக்கான கல்வி செயற்பாடுகள் ஜீலை 27ம் திகதி மீள ஆரம்பமானது.

இதேவேளை நாடாளாவிய  ரீதியில் சகல பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 10ம் திகதி முதல் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தரம் 5,10,11,12 மற்றும் 13  மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் வாரத்தில் 5 நாட்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தரம் 1,2,3 மற்றும் 4 ஆகியவற்றிற்கான கல்வி நடவடிக்கைகள் வாரத்தில் ஒரு நாள் மாத்திரமே முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: