மின்தடை தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வு அறிக்கை இன்று கையளிப்பு

நாடளாவிய ரீதியில் கடந்த 17ம் திகதி ஏற்பட்ட மின்தடை குறித்து  ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் ஆய்வு அறிக்கை மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மின்சக்தி அமைச்சரின் ஆலோசனைகளுக்கமைய நியமிக்கப்பட்ட குழுவின் குறித்த அறிக்கையினை ஒருவார காலப்பகுதிக்குள் சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிக்கையின் ஆரம்பகட்ட ஆய்வு அறிக்கை மின்சக்தி அமைச்சரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments: