வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிடண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய சப்ரகமுவ,மத்திய, மேல் மாகாணங்களிலும் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும்  இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் இவ்விடயம்  தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

No comments: