இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டங்ளை நடத்துதல்,வீடு வீடாகச் செல்லுதல், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல்,விளம்பர பலகைகளைக் காண்பித்தல், சுவரொட்டிகளைக் காண்பித்தல்,தேர்தல் தொடர்பான விளம்பரம் செய்தல் போன்ற செயற்பாடுகள் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்தத்தேர்தலில் இடம்பெற்ற வன்முறையின் அளவு குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும், இன்று நள்ளிரவுக்குப் பின்னர் ஆரம்பமாகும் அமைதிக் காலத்தில் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடாது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடாத்த அனைவரும் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: