சட்டவிரோத குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் கைது

கடந்த ஜீன் 6ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை ஹெரோயின்,கஞ்சா மற்றும் ஐஸ்ரக போதைப் பொருட்களுடன் 28,886 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்தக் காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 24,314 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஹெரோயின் போதைப் பொருளுடன் மாத்திரம் 15,404 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 23,139 பேரும், பல்வேறுப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 45,088 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: